lமருங்கப்பள்ளம் மருந்தீஸ்வரர் கோவில், தஞ்சை மாவட்டம்
மாருதியின் மூலிகைமலைத் துண்டம் விழுந்த இடமே!
மருதநிலம் விழுந்த இடம் மருந்துப் பள்ளமானதே!
மருந்துப் பள்ளமருவி காலப்போக்கில் மருங்கப் பள்ளமானதே!
மூலிகைவளர் மருந்துகுளம் தீர்க்கும்பிணி தீர்த்தமானதே!
ஐந்திங்கள் நின்சன்னதியை அன்பர்கள் சுற்றி வர!
ஐமுழுக்கும் பசும்பால் படைக்கும் அடியாரின் நோய் தீர!
மன்னன் நோய்தீர அருள்புரிந்த பாதிரி மருந்தீஸ்வரா!
மருங்கப் பள்ள மலர்ந்த சர்வேஸ்வரா!
Balaji Vedharajan