புதிய வகை வெளிநாட்டு மீன் கண்டுபிடிப்பு
நவம்பர் 14 ஆம் தேதி (14 th November 2010) அன்று தஞ்சாவூர் மாவட்டம், அம்மணிசத்திரம் கிராமத்தை சேர்ந்த அரும்பு என்ற மீனவர் அங்குள்ள வண்ணான் ஓடை குளத்தில் மீன்பிடிக்க சென்றபோது சுமார் ஒரு அடி நீளமுள்ள புதிய வகை கெழுத்தி மீன் வலையில் சிக்கியது. அவர் அந்த மீனை ஊராட்சி மன்ற தலைவர் ராஜவேலிடம் ஒப்படைத்தார். அவர் ஓம்கார் பௌண்டேஷன் நிறுவனத்திற்கு அளித்த தகவலின் பேரில், டாக்டர்.வே.பாலாஜி அந்த மீனை ஆய்வு செய்தார். டாக்டர். வே . பாலாஜி அளித்த தகவலின்படி இந்த மீனுடைய அறிவியல் பெயர் டீரோகோபிளிதைஸ் பர்டாலிஸ் என்பதாகும். இது லோரிகாரிடே என்ற உடல் முழுவதும் கவசம் போன்ற தோல் கொண்ட கெழுத்தி வகையை சேர்ந்த மீன் ஆகும். தென் மற்றும் வட அமெரிக்க கண்டங்களில் மட்டுமே வாழக்கூடிய இந்த மீன்கள் நம் பகுதியில் கண்டுபிடிக்கபட்டது ஆச்சரியமான விஷயமாகும். இந்த வெளிநாட்டு கெழுத்தி மீன்கள் அழகு மீன்களாக வளர்க்கப்படுவதற்காக தென் அமெரிக்காவிலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகின்றன. அப்படி இந்தியாவிற்கு வந்த இந்த மீன்கள் இங்குள்ள ஆறு குளங்களில் உயிருடன் தெரிந்தோ தெரியாமலோ விடப்படும்போது, அவை இனப்ப...