Posts

Showing posts from October, 2015

இறந்த நிலையில் திமிங்கலம் கரை ஒதுங்கியது - 23rd October 2015

Image
இன்று காலை சேது பாவா சத்திரம் கடலோர காவல் நிலையத்திலிருந்து போன் வந்தது.  தஞ்சை மாவட்ட கடலோர கிராமமான கணேச புரம் அருகே ஒரு திமிங்கலம் இறந்த நிலையில் ஒதுங்கி இருப்பதாக தகவல் வந்துள்ளதாக காவல் நிலைய உதவி ஆய்வாளார் திரு. பாலசுப்ரமணியன் கூறினார்கள்.  உடனே எனது குழுவினருடன் அந்த இடத்தை நோக்கி விரைந்தோம்.  என்னுடைய கடல் நீந்து கருவிகளையும் எடுத்து கொண்டு சென்றோம்.  இரண்டு நீர் புகா புகைப்பட கருவிகளையும் எடுத்து சென்றோம்.  கணேசபுர த்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்த திமிங்கலம் கரையிலிருந்து பார்க்கும்போதே நன்றாக தெரிந்தது.  அந்த கடல் பாலுட்டியின் வயிற்று புறம் வெள்ளையாக இருப்பதாலும், திமிங்கலம் தலை கீழாக புரண்டு கிடந்தாலும் வெகு தூரத்தில் இருந்தே அதை தெளிவாக பார்க்க முடிந்தது.  வனத்துறை, கடலோர காவல்துறை, கால்நடை மருத்துவத்துறையை சேர்ந்தவர்களுடன் இணைந்து இரண்டு படகுகளில் அனைவரும் சென்றோம்.  போகும் வழியிலே எனது நீச்சல் உடைகளை அணிந்து கொண்டு தயாராக இருந்தேன்.   தஞ்சை மாவட்டத்தின் தெற்கு கடல் பகுதி மிகவும் ஆழம் குறைவாக இருந்த...