Posts

Showing posts from July, 2010

தஞ்சை மாவட்ட கடலோர கிராமங்களின் சில அரிய மர வகைகள் - ஒரு ஆய்வு

Image
தஞ்சை மாவட்ட கடலோர கிராமங்களின் சில அரிய மர வகைகள் - ஒரு ஆய்வு Dr.V.பாலாஜி மற்றும் G.முருகேசன் ஓம்கார் பவுண்டேஷன் பட்டுக்கோட்டை 2009 மே மாதம் ஓம்கார் பௌண்டேஷன் நிறுவனத்தின் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட கடலோர கிராமங்களில் உள்ள அரிய வகை மரங்கள் பற்றியும்,அதன் மருத்துவ பயன்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.இதில் ஏரிப்புரக்கரை,சேதுபாவாசத்திரம்,சம்பைபட்டினம்,அம்மணிசத்திரம்,செந்தலை வயல்,அடைகத்தேவன்,மகிழங்கோட்டை ஆகிய கிராமங்களில் உள்ள மகாலிங்க மரம்,மகிழ மரம்,இழுப்பை மரம்,மருது மரம்,லெசேட்டை மரம், வெப்பாலை மரம் ,பின்னை மரம்,விலா மரம் மற்றும் குதிரை மரம் போன்ற ஒன்பது வகை மரங்கள் இருப்பது தெரியவந்தது. மகாலிங்க மரம் : இது ஏரிப்புரக்கரை கிராமத்தில் உள்ள வழுதியம்மன் கோவில் அருகில் உள்ளது.இதன் விதை லிங்க வடிவில் உள்ளது.இது சிவன் கோவிலுக்கு உரிய மரம் என்றும் சொல்லப்படுகிறது. இது கோவில் சார்பில் பரமரிக்கப்படுகிறது. இது இப்பகுதியில் எங்கும் காண இயலாத மரம் என்று சொல்லப்படுகிறது. மகாலிங்க மரம் மகிழமரம் : இம்மரம் சேதுபாவசத்திரத்தில் உள்ள சத்திர வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த மரத்...