Monday, April 22, 2013

Indo-Pacific humpback Dolphin washed ashore in Palk Bay - இறந்து கரை ஒதுங்கிய அரிய வகை டால்பின்


Villagers of Velivayal informed us about a marine mammal washed ashore on the coast. OMCAR team visited the site at 8.15 am and later informed local forest department, marine police department and media. This village is located in Thanjavur District, Tamil Nadu, India.

The specimen was decayed and the surface was oily. We measured the length of the specimen (nose tip to tail), which was about 8.4 feet. The distance between nose tip and the dorsal fin was 64 cm.  The specimen photos were taken and immediately shared with Marine Mammals Group in Facebook and Yahoo groups to request identification.  Dr. Dipani Sutaria and Dr. Ranil Nanayakkara have identified the dolphin species through yahoo groups immediately.  Additional documents given by Dr. Dipani Sutaria, was printed out in English, and translated in to Tamil was given to local forest department, marine police department, Navy and media in order to create awareness about this species and conservation of its habitat (Palk Bay).

Dr. Veeraselvam, veterinarian doctor working at Thambikottai Government Veterinary Hospital has done insitu necropsy, organized by Tamil Nadu Forest Department.  He found a spine of catfish/ray found inside the lungs. Dr. Veeraselvam stated that the spine found penetrated inside lungs across digestive tract, might be the reason for the death of this animal.  The stomach contents had three numbers of cat fishes, partially digested.  Local villagers stated that these dolphins might be feeding in northern Palk Bay (offshore of Muthupet lagoon), where the muddy bottom habitats catfishes.
  
This is the first time record of this species in Thanajvur District coastal area.  Wide media coverage including printing and visual media has given a good focus to conservation of Palk Bay ecosystems, as it is also a habitat of another marine mammal in addition to porpoises, dugongs and bottle nose dolphins.


அரிய வகை டால்பின் தஞ்சை மாவட்டத்தில் உள்ள வெளிவயல் கிராமத்தில் கரை ஒதுங்கியது இதன் அறிவியல் பெயர் சௌசா சைனன்சிஸ் ஆகும். கரை ஒதுங்கிய இந்த பெண் டால்பினின் நீளம் எட்டரை அடியாகவும், எடை சுமார் 150 கிலோவாகவும் இருந்தது. ஓம்கார் நிறுவனத்திற்கு மீனவர்கள் தந்த தகவலையடுத்து, அந்நிறுவனம் அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தது .சேது பாவா சத்திரம்  கடலோர காவல் நிலையத்தை காவல் துறையினர், பட்டுக்கோட்டை வனத்துறை அலுவலகத்தை சேர்ந்த வனச்சரகர் கருப்பையா மற்றும் ஓம்கார் பௌண்டேஷன் இயக்குனர் டாக்டர். வே பாலாஜி ஆகியோர் பார்வையிட்டனர். இறந்த விலங்கின் உருவ அமைப்பு, பல் அமைப்பு, துடுப்பின் தோற்றம் போன்றவற்றை ஆய்வு செய்த பின்னர் இதன் வகை கண்டறியப்பட்டது. 

தம்பிகோட்டை மற்றும் அதிராம்பட்டினம் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கால் நடை 
மருத்துவர் டாக்டர் வீரசெல்வம், இறந்த டால்பினின் உடலை பிரேத பரிசோதனை செய்து பார்த்தபோது, டால்பினின் நுரையீரல் பகுதியில் திருக்கை/கெழுத்தி  மீனுடைய முள் குத்தியிருப்பது தெரியவந்தது. சுமார் பத்து சென்டி மீட்டர் நீளம் இருந்த இந்த முள் ஆடா திருக்கை போன்ற மீன்களில் காணப்படும் என்று வெளிவயல் மீனவர்கள் கூறினார்கள். எனவே, இந்த டால்பின், திருக்கை அல்லது கெழுத்தி மீன் உண்ணும்போது தாக்கியதால் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த வகை டால்பின்கள், சர்வதேச சுற்றுசூழல் அமைப்பான IUCN, அழியும் நிலைக்கு சென்றுகொண்டு இருக்கும் இனமாக அறிவித்துள்ளது. எனவே, இவ்வகை அரிய கடல் உயிரினங்கள் வாழும் பாக் ஜலசந்தி சுற்றுசூழல் வளத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். 

மேலும், இந்த வகை பொதுவாக டால்பின்கள் அதிகபட்சமாக சுமார் 11 அடி வரை நீளமாகவும், 284 கிலோ வரை 
எடை உடையாதாகவும் இருக்கும். இவற்றில் பெண் டால்பின்கள் ஆண் டால்பின்களை விட சிறியதாக காணப்படும். இவற்றின் உடலமைப்பு வேகமாக நீந்துவதற்கேற்ப இரப்பர் போன்று காணப்படும். இதன் முதுகு பகுதியில் உள்ள துடுப்பு மற்ற டால்பின்களை விட சிறியதாகவும், முதுகின் நடுப்பகுதியிலும் அமைந்து இருக்கும். முதுகில் திமில் போன்ற அமைப்பு காணப்படுவது இவற்றை மற்ற டால்பின் வகைகளிலிருந்து வேறுபடுத்த உதவுகிறது. எனவே, இவற்றை ஆங்கிலத்தில் humpback Dolphins - திமில்முதுகு டால்பின்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை இந்தியா, சவுத் ஆப்ரிக்கா, சவுத் சீனா, செங்கடல், அரபிக்கடல், வங்காள விரிகுடா, தாய்லாந்து, இந்தோனேசிய மற்றும் ஆஸ்திரேலியாவின் வட மேற்கு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன.



Spine found penetrated inside the the lung of dead dolphin (இறந்த டால்பின் நுரையிரலில் பாய்ந்து இருந்த திருக்கை /கெழுத்தி முள், இதன் மூலம் டால்பின் இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது) 
Digested fish found inside the stomach of Dolphin
இறந்த டால்பின் இரைப்பையில் இருந்த பாதி செரிக்கப்பட்ட மீன் 


Veterniary Doctor Veeraselvam Dissecting the animal for post mortem 
கால்நடை மருத்துவர் டாக்டர். வீரசெல்வம் டால்பின் உடலை மருத்துவ கூராய்வு செய்தபோது 

Dissecting Intestine குடல் பகுதி 


Partially digested fish found in stomach 
இரைப்பையில் இருக்கும் பாதி செரிக்கப்பட்ட மீன்கள் 

Spine found inside dolphin's lungs 
டால்பினின் நுரையீரலில் துளைத்த நிலையில் இருக்கும் திருக்கை முள்

The spine of Sting Ray/catfish found in Lung of Dead Dolphin, which might be a reason for its death 
அகற்றப்பட்ட திருக்கை/கெழுத்தி  முள்

The spine was 10cm in length
பத்து சென்டிமீட்டர் நீளமுள்ள திருக்கை முள் விஷத்தன்மை வாய்ந்தது.  இந்த வகை முள் குத்தியதால், பிரபல  வன சாகசகாரர்  ஸ்டீவ் இர்வின் Steve Irwin இறந்து போனார்.



கால்நடை மருத்துவர் மற்றும் வனத்துறையினர் இறந்த டால்பினின் தன்மை பற்றி விவாதிக்கின்றனர்   




OMCAR staffs and villagers  moving the dead dolphin to the shore
இறந்த டால்பின் முதன்முதலில் கண்டரியப்பட்டபோது கரைக்கு நகர்ர்த்தி வரப்படுகிறது 

Dorsal fin with hump - which is peculiar morphological characteristics of this species
















No comments: