Posts

Showing posts from July, 2025

அலையாத்திக்காட்டு மாடுகளும் - நீலக்கார்பனும்...

Image
2002 இல் அலையாத்திக் காடுகளையும் பாதுகாக்க வேண்டி நான் மேற்கொண்ட 1100 km பைக் பயணத்தில், பொதுவாக அலையாத்தி குறித்த விழிப்புணர்வு குறைவாகவே காணப்பட்டது. அப்பயணத்தில், கடலோர கிராமத்தில் தங்கி இருந்த போது, நண்பர் ஒருவர் கொடுத்த இரவு உணவை சமைக்க, நன்கு பட்டுப்போன சுள்ளிக்குச்சிகள் பயன்படுத்தினார். அலையாத்தி விறகுகள் நன்றாக அடுப்பில் எரியும் திறன் கொண்டவை என்று கூறுவார்கள். ஆனால் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி, மக்களிடம் அலையாத்திக் காடுகள் குறித்த பார்வையை முற்றிலும் மாற்றியது. பரவலாக இந்தியா முழுக்க இக்காடு வளர்க்கும் திட்டங்கள் துவங்கப்பட்டன . குறிப்பாக இந்தியாவின் கிழக்கு கடலோர மாநிலங்களில் அலையாத்தி வளர்ப்பு – சுனாமி தடுப்பாகவே முன்னிலைப்படுத்தப்பட்டன. தற்போது, புளூ கார்பன் என அழைக்கப்படும் பருவ நிலை மற்ற தீர்வாக அலையாத்தி கருதப்படுவதால், சர்வதேச அளவில் இவற்றின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது. நீலக்கார்பன் என்றால் என்ன? என்று பார்ப்போம் மனிதர்கள், தங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு, புவியில் இயற்கையாக சேமிக்கப்பட்ட பெட்ரோலிய எண்ணையை (ஹைட்ரோ கார்பன்) பெருமளவில் உறிஞ்சி எடுத்...