Wednesday, November 21, 2012

கடலுக்குள் பதிவு செய்யபட்ட வினோதமான சப்தங்கள்

எங்கள் ஆராய்ச்சி குழுவின் சார்பில், தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் 2006 ஆம் ஆண்டு போடப்பட்ட செயற்கை பவளப்பாறைகளை பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.  இந்த ஆறு ஆண்டுகளில் இந்த செயற்கை பவளப்பாறைகள் எந்த அளவுக்கு மீன்களின் உற்பத்திக்கும், புகலிடம் அளிப்பதற்கும் பயன்படுகிறது என்பதை ஆய்வு செய்து வருகிறோம்.



இதன் பொருட்டு நீருக்கு அடியில் ஒரு வீடியோ காமெராவை பொருத்தி, அதில் பதிவாகும் மீன்களை பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறோம். 

கடந்த நவம்பர் பதினேழாம் தேதி (2012)  மேற்கொள்ளப்பட்ட தொன்னுற்று  இரண்டு நிமிட வீடியோ பதிவை ஆராய்ச்சி செய்த போது, அதில் சில வினோதமான சப்தங்கள் பதிவானதை அறிய முடிந்தது.

கடலுக்குள் வாழும் அரிய வகை பாலுட்டி விலங்குகள், இத்தகைய சப்தங்களை ஏற்படுத்தி தங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்தி கொள்ளும் என்பதால், இத்தகைய பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களின் இருப்பை நமது கடற்பகுதியில்  இருப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது.

களவா என்று இங்குள்ள மீனவர்கள் அழைக்கும் மீன்கள்  (subfamily Epinephelinae of the family Serranidae, in the order Perciformes).

மற்ற கடல் ஆராய்ச்சியாளர்களுடன் இந்த வீடியோவை பகிர்ந்து கொண்ட போது, இந்த சப்தங்கள் எனது சுவாசிக்கும் கருவியிலிருந்தும் வரக்கூடும் என்று கூறினார்கள்.  எனினும், நான் இந்த காமெராவை கடலுக்கு அடியில் பொருத்தி விட்டு மீண்டும் நீருக்கு மேலே வந்து சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து விட்டு மீண்டும் காமெராவை எடுக்க மட்டுமே சென்றேன். எனவே, நான் இந்த வீடியோ பதிவு முழுமைக்கும் காமேராவுக்கு அருகில் இல்லாததால், இதில் பதிவகியுள்ள ஒலிகள், வேறு ஏதேனும் காரணியிலிருந்து வந்திருக்ககூடும்.

மேலும், எனது காமெராவை கடல் மண்ணில் ஆடாமல் பொறுத்த சில மஞ்சள் பைகளில் (ஜவுளி கடை பை) ஜல்லி கற்களை நிரப்பி, அதை காமெராவின் முக்காலியில் கட்டி விட்டேன்.

இந்த ஜல்லி பைகள் நீரின் அசைவில் ஒன்றுடன் ஒன்று உரசும்போது இத்தகைய ஒலிகள் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் யுகிக்கின்றேன்.

எனினும், யுகங்களை உறுதிபடுத்த மீண்டும் பலமுறை கடலுக்குள் செல்ல வேண்டும்!
நீங்களும் இந்த வினோத சப்தங்களை கேட்க  கீழ்கண்ட Youtube இணைப்பை சொடுக்குங்கள்.  



No comments: