சிவ வழி
எங்கும் ஒளியாய், ஓங்கார ஒலியாய் ஒலிக்கும் அருளானே! எல்லை இலாத சிவமே ! மானிடற்கெல்லாம் மறைநின் அருமையுணர, எவ்வடிவும் எடுக்கும் ஆதாரத் தத்துவமே🙏! லிங்கமே நின் முதல் வடிவு! தில்லை நடராசனே ஐந்தொழில் குறிக்கும் சக்தி வடிவு! தட்சிணா மூர்த்தியே ஞானறிவு குறிக்கும் குரு வடிவு! உமா-மகேஸ்வரனே நின்கருணையும் அன்பும் குறிக்கும் கிருபை வடிவு🙏! கேட்போர் கேட்கட்டும், நினக்கேன் திருவுருவென்று? சிவம் உணர்ந்தோர் அறிவார் அவர்தம் மனம் ஒருங்க, அருவத் தத்துவம் உள்ளுணர, அன்பாய் நின்கழல் கண்டுணர, அடியார்க்கும், பக்தர்க்கும் ஆனந்தக் கண்ணீராய் கண்கொள்ளா காட்சியாம் நின் திருவடிவு. அதைத் தினம் கண்டு பெரும்பேறு பெற – இந்த அற்பனுக்கு அருள்வாயோ! ஆலகாலனே! – நின் மேல் எங்கள் அன்பை எங்ஙனம் சொல்ல? ‘ஆ’ வின் பாலும், சந்தனமும் பூசி குளிர்வித்து , ஆளியும், தும்பையும், வில்வமும் அலங்கரித்து, ஓதுவார்க்கு ஓய்வின்றி ஊழியம் செய்து, உன்இல் மிளிர உழவாரப் பணி செய்து, உனைச்...