Posts

Showing posts from May, 2026

காவிரியும் கடலும்...

Image
ஐப்பசி, கார்த்திகை மழைக்காலத்தில் காவிரி ஆற்றின் வெள்ளநீர் நம் கடலில் கலக்கும் போது, அடர்த்தி குறைந்த நன்னீர், அடர்த்தி மிக்க கடல் நீருடன் உடனே கலந்துவிடாது. ஊடலால் பிரிந்திருக்கும் தலைவனும் தலைவியும் போல, அவை சில காலம் பிரிந்தே இருக்கும். கலங்கிய நன்னீர் கடலின் மேற்பரப்பிலும், தெளிந்த கடல் நீர் அடிப்பகுதியிலும் தனித்தனியாக நிற்கும். தை பிறக்கும் அறுவடை காலத்தில், ஜல்லிக்கட்டில் காளைகளும் காளையரும் சீறி வீரத்தை வெளிப்படுத்தும் நேரத்தில், வாடை காற்றின் வேகம் மெல்ல குறையும். அப்போது கடல் நீரும் நன்னீரும், பொருள் ஈட்டிச் சென்ற தலைவன் மீண்டும் தலைவியுடன் சேர்ந்து உள்ளம் இரண்டற கலப்பது போல, ஒன்றோடு ஒன்று கலக்கத் தொடங்கும். “உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்” என்ற திருக்குறளுக்கு ஏற்ப, பிரிவு அளவுக்கு மீறினால் வாழ்வு இனிமையடையாது என்பதை உணர்ந்த தலைவனும் தலைவியும் மீண்டும் கூடுவது போல, நன்னீரும் கடல் நீரும் சேரும். அவற்றின் கூடலுக்கு உதவுவது போல, வானில் மிதக்கும் நிலவு கடல் நீரை ஈர்த்து, வெள்ளமும் வடுவும் ஏற்படுத்தி துணை நிற்கும். அதே சமயம், திரைக்கடல் ஓடி பொருள் கொண்டு வ...