Monday, April 23, 2012

Balaji Vedharjan's - 1200 km Bike Expedition (2002) & 600 km Sea Kayak Expedition (2007) for Marine Conservation Awareness

Balaji Vedharajan - 1200 km Bike Expedition (2002)




Balaji Vedharajan - 600 km Sea Kayak Expedition (2007)




படம் சொல்லும் செய்தி

கடந்த சில வருடங்களாக எங்கள் குழுவால் வளர்க்கபட்டு வரும் கடலோர காடுகளை படத்தை கீழ்கண்ட படத்தை சொடுக்குவதன் மூலம் காணலாம்.  அறிவியல் பின்பலத்துடன் கூடிய செயல்பாட்டு முறையை, இங்குள்ள மக்களின் பாரம்பரிய, இயற்கை சார்ந்த அறிவுடன் இணைந்து இந்த காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தபட்டது.  கடலோரங்களில் மட்டும் வளரும் இந்த மேங்ரோவ் காடுகள், கடல் அரிப்பை தடுக்கவும், இயற்கை பேரிடர்களிலிருந்து காக்கவும் பயன்படுகிறது.  

சாதாரண மரங்கள் வளர தகுதியில்லாத உப்பு தன்மை வாய்ந்த இடங்களில் இவ்வகை மரங்கள் செழித்து வளர்கின்றன.  இவற்றை வளர்ப்பதற்கு நாம் எடுக்கும் மிக நீண்ட கால அளவை கொண்டு இருப்பதாலும், கடினமான ஒருங்கிணைக்கப்பட்ட தொடர் முயற்சி தேவைப்படுவதாலும்,  தற்போதுள்ள காடுகளை பாதுகாப்பதே, இது போன்று காடுகளை வளர்ப்பதை காட்டிலும் எளிமையான உத்தியாகும்.  

இந்த படத்தில் உள்ள காடுகளை வளர்ப்பதற்கு முன் இருந்ததை விட தற்போது அதிக எண்ணிக்கையில் இங்கு நண்டுகள் கிடைப்பதாக இப்பகுதி மீனவர்கள் சொல்கிறார்கள். இதற்கு இந்த காட்டில் இருந்து மக்கி விழும் இலைகளின் உட்டச்சத்து நிறைந்த மண் ஒரு காரணமாக இருக்கலாம், அல்லது நண்டுகள் தங்கள் குடும்பத்துடன் ஒரு புதிய இடம் தேடுகையில் ஒரு தோதான, மறைவான, ஈரப்பதமுள்ள இந்த இடத்தில் வந்து குடியமர்ந்து இருக்கலாம்.   சர்வேதச மார்க்கெட்டில் நல்ல விலை போக கூடிய சம்பா நண்டுகள், இந்த கடலோர காடுகள் உள்ள இடங்களில் தான் பிடிக்கப்படுகின்றன என்பது குரிப்பிடதக்க விஷயமாகும்.  தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் பிடிக்கப்படும் சம்பா நண்டுகள் சிங்கப்பூர் போன்ற இடங்களில் உள்ள உயர்தர உணவு விடுதிகளில் பரிமாறப்படுகின்றன. 

கடந்த ஆண்டு சிங்கப்பூர் சென்று இருந்தபோது ஒரு சீன உணவு விடுதியை கடந்து செல்ல நேரிட்டது, அங்கு ஒரு தொட்டியில் உயிருடன் பார்த்த Mr. சம்பா நண்டு, நம் ஊரை சேர்ந்தவராக இருப்பாரோ என்று தோன்றியது.  மனிதர்களிடையே மட்டும்தான் எங்கயோ பார்த்த ஞாபகம் இருக்க வேண்டுமா என்ன?

Click this image to see the slide show of mangrove growth

Sunday, April 15, 2012

Trapnet Fishery in Palk Bay (பாக் நீரிணைப்பில் அடைப்பு வலை மீன்பிடிமுறை)


அடைப்பு வலையின் மர ஊன்று கால்களில் ஒன்றை, கடலுக்கு அடியில் நிலை நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்.





அடைப்பு வலைக்குள் மாட்டிகொண்ட மீன்களை பிடிக்கும் முறைகள்.







வலைக்குள் இறங்கி கையினால் பிடித்த கடல் கெழுத்தி மீன் 








மேற்கண்ட படம், கடல் சூழல் மண்டலங்களை பாதுக்காக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது. இந்த அடைப்பு வலை மீனவரின் வலைகளை உற்று நோக்கினால், கடல் தாழைகள் (seagrass) சிக்கி உள்ளதை காணலாம். இதன் மூலம் இப்பகுதியில் நிறைய கடல் தாழைகள் உள்ளன என்பதை அறிய முடிகிறது.  இவை மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் மருத்துவமனைகளாக விளங்குகின்றன.  எனவே, கடலில் மீன்பிடி தொழில் சிறப்பாக இருக்க இந்த கடல் தாழைகள் அவசியமாகும்.  மேலும், இந்த படத்தை இன்னும் சற்று உற்று நோக்கினால், தொலைதூரத்தில் மங்க்ரோவ் (mangroves) காடுகள் இருப்பதை காணலாம். இந்த கடலோர காடுகளில் இருந்து வரும் மக்கிய சத்து பொருட்கள், கடல் தாழைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.  மேலும், கடல் தாழைகளில் உற்பத்தியாகும் கடல் இறால்கள், மீன்கள் மற்றும் நண்டுகள் அந்த காடுகளின் வேர்ப்பகுதிகளுக்கு சென்று உணவு தேடுவதால், கடல் கரையோரம் மீன்பிடி தொழில் செய்யும் சிறு மற்றும் ஏழை மீனவர்களின் வாழ்வை ஆதாரமாக்கும் அர்த்தமுள்ள பணியை இந்த கரையோர காடுகளும், கடல் தாழைகளும் சத்தமின்றி செய்து வருகின்றன. 

Wednesday, March 14, 2012

Salt Marsh in Muthupet

I found this beautiful salt marsh for the first time.  Its scientific name is  Heliotropium curussavicum


Wednesday, March 7, 2012

A branch of E.agallocha (Thillai maram), which is one of the mangrove species. The branch I observed had a steep cut in the dense forest area, which might be due to insect(s)!.
Board Walk in Sethukuda of Muthupet Mangroves.  This board walk is damaged now.  As it was established adjacent to a restoration canal, now the grown up mangroves extend the roots over the board walk.
Red clay spots are found in Muthupet


Beautiful ornamentation in E.agallocha bark
Fishers in Koraiyar creek of Muthupet.  We lost our traditional fishing vessels (thoni), replaced by fibre boats.  It reduces the physical work of fishers.  So, fishers no need to paddle the traditional wooden boats or sail. 
A mangrove fisher in Muthupet.  He uses the car tube for floating as well as moving on the muddy floor.  Traditionally, they have to walk about 8km  per day  with pot full of fishes on the head.  Might be good stamina and strong muscles to walk in the muddy river banks in the past.  

Now, they use fibre boats - a more comfortable and quick transport between the market and fishing grounds.  However, it might reduces their physical strength. 

An egret is waiting patiently behind a mangrove tree in Sethukuda of Muthupet on 3rd March 2012. 

Thursday, March 1, 2012

Changing mangroves in Palk Bay!..(என்னாச்சு இந்த காடுகளுக்கு?)



முத்துபேட்டையில் உள்ள லகூன் என்று அழைக்கப்படும் கடலோர ஏரியை சுற்றி உள்ள மேங்ரோவ் காடுகளின் வளர்ச்சியை செயற்கை கோள் புகைப்படங்களை கொண்டு ஆய்வு செய்தேன்.

இந்த ஆய்வின் படி, கடந்த 2003 ஆம் வருடத்தில் எடுக்கப்பட்ட செயற்கை கொள் புகைப்படத்துடன், 2011 வருடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒப்பிட்டு பார்த்தேன்.  

இந்த கடலோர ஏரியின் (லகூன்) வடகிழக்கு, தெற்கு, வடமேற்கு போன்ற இடங்களில் உள்ள காடுகளின் பரப்பளவை துல்லியமாக கணக்கிட்டு, பின்பு அதே பகுதிகளின் தற்போதிய காடுகள் உள்ள சூழலையும் ஒப்பிட்டு பார்த்தேன்.

இந்த செயல்களை செய்வதற்கு சில தொழிநுட்ப (GIS) ரீதியிலான திறனும், காடுகளின் வகைகளை செயற்கைக்கோள் புகைப்படங்களில் உள்ள நிற வேற்றுமையை கொண்டு வேறு படுத்தி பார்க்கும் ஆய்வக - கள பயிற்சியும் தேவையாகும்.  

பல்வேறு இலவச மென் பொருட்களை கொண்டும் சில அடிப்படை ஆய்வுகளை செய்யலாம்.  இப்போது மீண்டும் விஷயத்திற்கு வருவோம்.

இந்த ஆய்வின்படி, முத்துபேட்டை லகூனில் உள்ள வட கிழக்கு மூலையில் (கிளைதாங்கி மற்றும் மரைக்கா கோரையாறு பகுதிகள்) காடுகளின் பரப்பு, கடந்த 2003 ஆம் வருடத்திலிருந்து 2011 ஆம் வருடத்திற்குட்பட்ட எட்டு வருடங்களில் 26.7 ஹெக்டர் அளவிற்கு அதிகரித்துள்ளது (படம் மேலே உள்ளது). 

தற்போதைய உலக சூழலில், இருக்கும் காடுகளை காப்பதே பெரும்பாடாக இருக்கும் நிலையில், இயற்கையாகவே இந்த பகுதியில் உள்ள மங்க்ரோவ் காடுகள் அதிகரித்து உள்ளது நல்ல விஷயமாகும்.

அதே சமயம், காடுகளின் பரப்பு, லகூனை நோக்கி விரிவுபட்டு இருப்பதால், வருங்காலத்தில் இந்த லகூன் சுருங்கி விடும் வாய்ப்பு உள்ளது.  நீர்பிடிப்பு பகுதிகளில் மரங்கள் வெட்டப்படுவதும், ஆறுகளில் மணல் அள்ளப்படுவதும் அதிகரித்து உள்ளதால் அங்கு உள்ள நுண்ணிய மண் பொருட்கள் (களி) அதிகமாக அடித்து வரப்பட்டு, அதன் காரணமாக லகூன் நீர்பிடிப்பு பகுதியின் ஆழம் குறைந்து, அந்த சேற்று பகுதியில் காடுகள் வேகமாக விரிவுபட்டு இருக்கலாம் என்றும் கணிக்க முடிகிறது.  லகூனின் நீர்பிடிப்பு பகுதியின் பரப்பு குறையும்போது அதை சார்ந்த சிறு, குறு, எளிய மீனவர்களின் மீன்பிடி தொழிலும் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்படலாம்.   இந்த கூற்றை மெய்பிக்கவோ அல்லது பொய்பிக்கவோ வேண்டுமெனில் மேலும் கள ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.. 

அதே போலவே, லகூனின் வட கிழக்கு மூலையிலும், முகத்துவார பகுதியிலும் காடுகள் சீராக அதிகரித்து உள்ளன.  






Feeling Alive in Wild - 1st March 2012

in dense setthukuda forest area, the relationship between tree size and its space between each other is perfectly organized by nature.  For example, when they are young, thousands of seedlings grow together, later the stronger and fast growing seedling dominate the space.    

 Data sheets, mud, mosquitoes and mangroves... 

 This canal is blocked by the planted Rhizophora mucronata (a species in mangroves). However the roots offer a perfect shade for young fishes.

 Mud matters for mangroves

 measuring height of a mangrove R.mucronata

Tuesday, June 21, 2011

The beautiful mermaid - her sad end in our coast

It is sad that we have lost another beautiful sea cow (Dugong) from our coast. Yes, this huge female dugong washed ashore on the first week of june 2011. The body scars showed that it might have an accident with fisher boats.
Let us pray for this beautiful, innocent soul.

Wednesday, June 1, 2011

அற்புத கடல் நீரோட்டங்களில் சில அனுபவங்கள்

உலக கடல் பரப்பை பெருங்கடல்களாகவும் (ocean), கடல்களாகவும் (sea) பிரிக்கலாம். இதில் பெருங்கடல்களின் ஒரு சிறு பகுதியே கடல்கள் ஆகும். உதாரணத்திற்கு இந்திய பெருங்கடலின் ஒருசிறு பகுதியே வங்காள விரிகுடா கடல் ஆகும். இப்படி பல பெயர்களால் நாம் பிரித்து வைத்தாலும், மற்ற எல்லா பெருங்கடல்களும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டே உள்ளன

எனவே, நீங்கள் கன்னியாகுமரியிலிருந்து நேராக தெற்கு நோக்கி சுமார் 8,000 கிலோமீட்டர் ஒரு படகில் பயணித்தால், எந்த தடையுமின்றி பெங்குயின் பறவைகள் வாழும் பனி படர்ந்த அண்டார்டிகாவில் சென்று கரை ஏறலாம். இந்த தூரம் நமக்கு மலைப்பாக இருந்தாலும், கடல் ஆமைகளும், திமிங்கலங்களும் கம்பன் எக்ஸ்பிரசில் சென்னையிலிருந்து ஊருக்கு விடுமுறைக்கு வருவதை போல பல இடங்களுக்கு சர்வ சாதாரணமாக பயணிக்கின்றன. இதில் ஒரு சின்ன வித்தியாசம், இந்த கடல் விலங்குகள் கம்பனுக்கு பதில் கடல் நீரோட்டத்தில் பயணிக்கின்றன.

கடல் நீரோட்டங்கள் வலிமையானவை. அவற்றின் நீளமும், அகலமும், உலகில் ஓடும் எந்த ஒரு ஆற்றின் அளவையும் விட மிக பெரியதாகும். மழைக்காலங்களில் நம் ஊர் ஆற்றில் ஓடும் நீரின் வேகத்தையும், வளைந்து நெளிந்து செல்லும் அதன் இயல்பையும் நாம் நன்றாக பார்க்கமுடியும். ஆனால், பூமியின் 29% மேற்பரப்பை மட்டுமே மூடியுள்ள நிலத்தில் வாழும் நாம், பூமியின் 71% மேற்பரப்பை நீலவண்ண நீர்போர்வையாக போர்த்தியுள்ள க்டலில் ஓடிக்கொண்டு இருக்கும் பிரம்மாண்டமான கடல் நீரோட்டங்களை நம்மால் கரையிலிருந்து பார்க்கும் போது தெரிந்து கொள்ள வாய்ப்பு இருப்பதில்லை.

கடலின் ஒவ்வொரு துளி நீரும் காற்றினால் தள்ளப்படுவதாலும், உப்பு தன்மை மற்றும் வெப்பநிலை மாறுபாட்டாலும், சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே ஏற்படும் ஈர்ப்பு விசை மாறுபாட்டாலும் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றது. எனவே, சென்னை மெரினா கடற்கரையில் உங்கள் கால்களை நனைத்து செல்லும் கடல் நீர் இதற்கு முன்பு அண்டார்டிகாவிலோ பசுபிக் பெருங்கடலிலோ இருந்திருக்கலாம். அதாவது, உடலின் எல்லா பகுதிகளுக்கும் இரத்தம் பாய்வதை போல கடல் நீரோட்டங்கள் கடலின் உயிரோட்டமாய் உலகெங்கிலும் ஓடுகின்றன. இந்த வேலிய்ற்ற மாபெரும் கடற்பரப்பில், ஆர்க்டிக் முதல் அன்டார்டிக் வரையிலும், இந்திய பெருங்கடல் முதல் பசிபிக் பெருங்கடல் வரையிலும் கடல் நீரோட்டங்கள் ஒரு கன்வேயர் பெல்ட் போல தொடர்ந்து ஓடி கொண்டே இருக்கின்றன. இந்த கடல் கன்வேயர் பெல்டில் மீன்களும், நண்டுகளும், ஆமைகளும், திமிங்கலங்களும் சுறாக்களும் இலவசமாக பயணித்து இனப்பெருக்கம் செய்ய பல்வேறு இடங்களுக்கு செல்கின்றன. இதன் காரணமாகவே, குறிப்பிட்ட கடல் நீரோட்டங்கள் பாயும் குறிப்பிட்ட சீசனில் மட்டும் அதிக அளவில் மீன்கள் கிடைக்கின்றன. உதாரணமாக, வடகிழக்கு பருவக்காற்று எனப்படும் வாடைக்காற்று வீசும் மாதங்களில், வடக்கிலிருந்து தமிழகத்தின் கரையோரமாக வன்னி வெள்ளம என்ற நீரோட்டம் வலிமையுடன் ஓடுகிறது. வாடை காற்றினால் தள்ளப்படும் இந்த வன்னி வெள்ளம் பலவிதமான மீன்களையும், நண்டுகளையும், இறால்களையும் அள்ளி கொண்டு வந்து கோடியக்கரை பகுதியில் குவிப்பதால் (டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) பலகோடி ரூபாய் மதிப்பிலான மீன்பிடித்தொழில் இங்கு நடைபெறுகிறது. எனவே, தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மீனவர்கள் இந்த சீசனில் இங்கு வந்து தங்கி மீன்பிடித்து செல்கின்றனர்

.காற்றினால் உருவாகும் இந்த நீரோட்டத்தை போல, கடல் நீரின் வெப்பநிலை மாறும்போதும் நீரோட்டம் உருவாகிறது. சாதாரண தண்ணீர் 0 (ஜீரோ டிகிரி) யில் உறைந்து விடும் ஆனால் கடல் நீரில் உப்பு இருப்பதால் -4 (மைனஸ் நான்கு டிகிரி) யில் மட்டுமே உறைந்து பனிக்கட்டியாகும். ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா போன்ற துருவப்பகுதிகளில் உள்ள கடல்நீர் பனிக்கட்டியாக மாறாமல், அதே சமயம் குளிர்ச்சியாகவும், அடர்த்தி அதிகமாகவும் இருப்பதால் எடை அதிகரித்து கீழ்நோக்கி அழுத்தப்படுகிறது. இந்த குளிர்ந்த கடல் நீர் கடல் அடிப்பகுதியில் ஆழ்கடல் நீரோட்டமாக மாறி பூமத்திய பகுதி நோக்கி மெதுவாக நகர்கிறது. இதனால் துருவ கடல் பகுதியின் மேல்பரப்பில் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப, பூமியின் வெப்பமான மத்திய பகுதியில் உள்ள கடல் நீரானது ஒரு மேல்பரப்பு வெப்ப நீரோட்டமாக மாறி துருவத்தை நோக்கி ஓடுகிறது. ஒரு மாபெரும் நீர்சக்கரம் மிக மெதுவாக சுழல்வதை போல இந்த நிகழ்வு கடலுக்கடியில் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த வெப்ப அல்லது குளிர் நீரோட்டங்கள் பயணிக்கும்போது, அதன் வெப்பமோ அல்லது குளிர்ச்சியோ காற்றுக்கு கடத்தப்பட்டு, அதனருகில் உள்ள நாடுகளின் வெப்பநிலையை மாற்றுகின்றன.

நடுக்கடலின் மேற்பரப்புநீர் கண்ணாடி போன்று மிக தெளிவாகவும், ஊட்டச்சத்து குறைவாகவும் காணப்படும். எனவே ஆங்கிலத்தில் இதை நீலப்பாலைவனம் (blue desert) என்று அழைப்பார்கள். நிலத்தில் ஓடி கடலில் பாய்கின்ற ஆற்றின் மூலமாகவோ அல்லது கடல் நீரோட்டங்கள் மூலமாகவோ மட்டுமே இந்த கடல் நீர் சத்து மிகுந்ததாக மாற்றப்படுகிறது. நாம், முதலில் குறிப்பிட்ட ஆழ்கடல் நீரோட்டங்கள், கடலின் அடிப்பகுதியில் செல்லும்போது கடலடி பரப்பில் படிந்துள்ள ஊட்டசத்துக்களை கிளறி தன்னுடன் இழுத்து செல்கிறன. இவை, ஆழம் குறைவான கரைப்பகுதியில் மோதும்போது மேலே எழும்பி, ஆழ்கடலின் சத்துபொருட்களை மேலே கொண்டு வருகின்றன. இந்த செயலினால், கடல்நீர் வளமிக்கதாக மாறி அதில் ஏராளமான நுண்ணிய தாவர மற்றும் விலங்கு உயிரினங்கள் உற்பத்தி ஆகின்றன. அதை தொடர்ந்து, இவற்றை சாப்பிட கூடிய சிறு மீன்களும் பெரிய மீன்களும் உற்பத்தியாகி கடலின் மீன்வளம் அதிகரிக்கின்றது, இதனால் மீன்பிடி தொழிலில் நல்ல வருமானமும் கிடைக்கிறது.

நம் அண்டை மாநிலமான கேரளாவில் ஒவ்வொருவருடமும் மே முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவக்காற்று வீசும் காலங்களில், கடல்நீரோட்டங்கள் கேரள கடற்கரையை நோக்கி கடலடியில் படிந்துள்ள சத்துப்போருட்களை மேலே கொண்டு வருகின்றன. இதனால் பெருகும் சிறு உயிரினங்களை சாப்பிட்டு, இறால்கள் மற்றும் மத்திக்கவளை மீன்கள் ஏராளமாக உற்பத்தி ஆகின்றன. இந்த சீசனில் பெருமளவில் பிடிக்கப்படும் இந்த வகை இறால்களும் மீன்களும், அம்மாநில கடலோர கிராம பொருளாதார மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த கடல் நீரோட்டங்கள் அனைத்தும் ஒரே விதமான வேகத்தில் இருப்பதில்லை. தீவுகளுக்கு இடையே ஓடும கடல் நீரோட்டங்களும், இரண்டு கடல்களுக்கு இடையே உள்ள நீரிணைப்பில் ஓடும் கடல் நீரோட்டங்களும் அதி வேகமானவை. கடந்த 2009 ஆம் வருடம், பிலிப்பின்ஸ் நாட்டிற்கு செல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்தபோது தீவுகளுக்கு இடையே அதிவேக நீரோட்டங்களில் மாட்டிகொண்ட அனுபவம் எனக்கு ஏற்பட்டது. சுமார் ஏழாயிரம் தீவுகள் கொண்ட அந்த நாட்டில் நெக்ரோஸ் என்ற தீவுக்கு அருகில் இருந்த ஒரு சிறிய குட்டி தீவுக்கு செயற்கையாக பவளப்பாறைகள் வளர்க்கப்படுவதையும், ஜெயன்ட் க்ளாம்ப்ஸ் (giant clams) என அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய சிப்பி வகைகள் இருப்பதையும் பார்ப்பதற்காக ஒரு குழுவாக சென்றோம். எங்கள் குழுவில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த கடல் ஆராய்ச்சியாளர்களும், சுற்று சூழல் ஆர்வலர்களும் வந்திருந்தனர். வெள்ளை நிற மணலும், பளிங்கு போன்ற தண்ணீருடனும் மிகவும் ரம்யமாக காட்சியளித்த அந்த தீவை சுற்றி அலைகளே இல்லாமல் மிகவும் அமைதியாக இருந்தது.

I was excited to dive in Philippine coral reefs

நீளவாக்கில் இருந்த அந்த தீவிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் செயற்கை பவளப்பாறைகள் வளர்க்கப்படும் இடம் இருப்பதாக எங்களை அழைத்து சென்ற வழிகாட்டி சொன்னார். ஆர்வகோளாறில் நானும் என்னுடன் வந்திருந்த இரண்டு பிலிப்பைன்ஸ் நாட்டு நண்பர்களும் சிலிண்டர் போன்ற எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி அதை பார்ப்பதற்காக நீந்த துவங்கினோம். காலில் துடுப்பும் முகத்தில் நீரடி கண்ணாடியும் அணிந்து இருந்ததால், அவ்வபோது கடலுக்குள் மூழ்கி சென்று மீன்களையும், பவளப்பாறைகளையும் ரசித்து கொண்டு உற்சாகத்துடன் நீந்தி சென்று கொண்டு இருந்தோம். அரைமணி நேரத்தில் செயற்கை பவளப்பாறை வளர்க்கும் இடத்திற்கு நீந்தி வந்தடைந்தோம். அங்கு சுமார் 20 அடி ஆழத்தில் வைக்கப்பட்டு இருந்த செயற்கை பவளப்பாறைகள் கூண்டை சுற்றிலும் ஏராளமான மீன்கள் நீந்தி கொண்டு இருந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. சிறிது நேரம் கழித்து, இளைப்பாற எந்த வழியும் இல்லாததால் மூவரும் தொடர்ந்து நீந்தி மீண்டும் கரைக்கு வர முடிவு செய்தோம்.

Snorkeling in a cave at Borakay island. I free dived under a rock in the cave to reach the open sea. Such a beautiful sea with its own hidden dangers.

ஆனால், நாங்கள் வரும்பொழுது இருந்ததை விட கடலின் நீரோட்டம் திசை மாறி, வேறு திசையில் வேகமாக இழுப்பதை அப்போதுதான் உணர ஆரம்பித்தோம். நாங்கள் கிட்டதட்ட தீவின் முனைப்பகுதிக்கு நீந்தி வந்துவிட்டதால் நீரோட்டத்தில் நடுவில் நன்றாக சிக்கி கொண்டோம். நம் ஊர் ஆற்றில் தண்ணீர் ஓடுவதை போன்ற அதன் வேகத்தில் ஒரு அடி எதிர்த்து நீந்தினால் நான்கு அடி பின்னோக்கி தள்ளியது. அதற்கு மேல் எதிர்த்து நீந்த முடியாது என்பதால் அதன் போக்கிலேயே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நீந்தி சென்றோம். அதிர்ஷ்டவசமாக, நீளமான அந்த தீவின் கரைக்கு இணையாக நீரோட்ட திசை இருந்ததால், அதன் வழியாகவே நீந்தி சென்று தீவின் மற்றொரு இடத்தில் கரை சேர்ந்தோம். பலர் இப்படி நீரோட்டங்களில் ஆபத்தில் சிக்கி கொள்ளும் சம்பவங்கள் உலகெங்கும் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த நிலையில் தைரியமாக இருப்பதும், நன்றாக நீச்சல் தெரிவதும் மட்டுமின்றி கடலின் இயல்பை பற்றிய அறிவும் இருந்தால் தப்பி உயிர் பிழைக்க முடியும்.

After swimming out of the cave under a 20 feet rock.

கோடியக்கரைக்கும் யாழ்பாணத்திற்கும் இடையில் உள்ள 55 கி.மி குறுகிய கடலில் ஒரு வலிமையான நீரோட்டம் வடக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் மாறி மாறி எப்போதும் ஓடி கொண்டு இருக்கின்றது. வேதாரண்யம் பகுதியை சேர்ந்த ஒரு வயதான மீனவர் கூறியபடி “நீரோட்டத்தை எதிர்த்து இந்த பகுதியில் ஒரு படகை அதன் முழு வேகத்தில் இயக்கினாலும், அது ஒரு அடி முன்னேறி செல்வது கூட மிக கடினமாக இருக்கும். மேலும், ஒரு படகு விபத்தில் ஆழமற்ற பகுதியில் மூழ்கினால் கூட உடனே அதை கரைக்கு கொண்டு வந்து விட வேண்டும், இல்லையெனில் நீரோட்டத்தினால் அரித்து வரப்படும் மணல் அதை வேகமாக மூடிவிடும்” என்று கூறினார். இந்த வார்த்தைகள் கடல் பற்றிய அவரின் ஆழ்ந்த அனுபவத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.

மீனவர்களுக்குள்ள பரம்பரையான கடல்சார் அனுபவ அறிவை எண்ணி வியக்கும் அதே வேளையில், கடல் வழியாக படையெடுத்து சென்ற பண்டைகால தமிழக மன்னர்களும், திரை கடல் ஓடி திரவியம் தேடிய பழந்தமிழர்களையும் எண்ணிப்பார்த்தால், அவர்களுக்கு இந்த கடல் நீரோட்டங்கள் பற்றிய அபாரமான அறிவு இருந்திருக்க கூடும் என உணர முடிகிறது.

இந்தோனேசியாவில் பேசப்படும் பாலி என்ற மொழியை தாய்மொழியாக கொண்ட என்னுடைய நண்பரிடம் பேசி கொண்டு இருக்கும்போது, யதார்த்தமாக, பாலி மொழியின் உள்ள உயிர் மற்றும் மெய் எழுத்துக்களை உச்சரிக்குமாறு கேட்டேன். அவர் இந்தியாவிற்கு இதுவரை வந்ததே இல்லை, மேலும் அவருக்கு தமிழ் மொழி பற்றி எதுவுமே தெரியாது. ஆனால், பாலி மொழியின் உயிர்மெய் எழுத்துகளை அவர் சொன்னபோது, அவை தமிழ் மொழியின் அத்தனை உயிர்மெய் எழுத்துக்களை போல இருந்தது.

இதிலிருந்து, பண்டைய கால தமிழர்கள் அந்த தீவுகளுக்கு சென்று நமது கலாச்சாரத்தையும், மொழியையும் பரப்பி இருக்கின்றார்கள் என்பதையும் இன்னும் அந்த நாட்டு மக்கள் அவற்றையே பயன்படுத்துகிறார்கள் என்பதையும் ஆதாரப்பூர்வமாக தெரிந்து கொள்ள முடிகிறது. பாலி மொழிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆய்வு இளம் தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு தலைப்பாக இருக்கலாம் என்று நினைக்கின்றேன். எனவே, கடல் காற்றை பற்றியும், நீரோட்டங்கள் பற்றியும் தெளிவான புரிதல் இல்லாமல் நாகப்பட்டினத்திலிருந்து நாலாயிரத்து ஐநூறு கி.மி தொலைவுள்ள பாலி தீவுக்கு பழந்தமிழர்கள் சென்று இருக்க இயலாது.

பண்டைய தமிழரின் கடல் வாணிகத்தில் கடல் நீரோட்டங்கள் எந்த அளவுக்கு முக்கிய பங்கு வகித்திருக்க கூடும் என்பதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம்.

ஒரு பாய்மர கப்பலில் தமிழகத்திலிருந்து கடல் வழியாக பர்மா செல்ல வேண்டுமானால் தென்னங்காற்று (தென்கிழக்கு பருவக்காற்று) வீசும் காலங்களில் ஓடும் உறுதியான தெண்டி வெள்ளத்தை (தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடும் கடல் நீரோட்டம்) பயன்படுத்தி எளிதாக சென்றிருப்பார்கள். அது போலவே, பர்மாவிலிருந்து தமிழகத்திற்கு திரும்பி வர வாடை காற்று (வடகிழக்கு பருவக்காற்று) வீசும் காலங்களில் கடலில் ஓடக்கூடிய வலிமையான வன்னி வெள்ளத்தை (வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடும் கடல் நீரோட்டம்) பயன்படுத்தி வந்து சேர்ந்திருப்பார்கள். தெண்டி வெள்ளம், வன்னி வெள்ளம் போன்ற பழந்தமிழ் வார்த்தைகள் இன்றும் தமிழக மீனவர்களால் பயன்படுத்தபடுகின்றன. மேலும், எனது முந்தைய கட்டுரையில் குறிப்பிட்ட படி பல வகையான கடல் மீன்களின் தமிழ் பெயர்களும் காலம் காலமாக இன்னும் மீனவர்களிடையே வழக்கில் இருந்து வருகின்றன. ஆனால், தற்போது அதிகரித்து வரும் சுற்று சூழல் சீர்கேட்டால், தமிழக கடலில் ஒரு மீன்வகை அழிந்து விட்டால், அத்துடன் ஒரு பழந்தமிழ் சொல் பயன்பாட்டையும் நாம் முற்றிலும் இழந்து விடுகிறோம் என்று நினைக்கின்றேன்.

பொருளாதார, அரசியல் மற்றும் சுற்றுசூழல் பாதிப்பு என மற்ற எல்லா காரணங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு யதார்த்தமாக பார்க்கும்போது, இன்று இந்த பகுதியில் வெட்டப்பட்ட சேது சமுத்திர திட்டம் பாதியில் நின்று போனதற்கு இந்த அதிவேக நீரோட்டங்களும் ஒரு முக்கிய காரணமாகும். அட்லாண்டிக் கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் பனாமா கால்வாயும், எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயும் வெற்றிகரமாக இயங்கும்போது சேது சமுத்திர கால்வாய் மட்டும் ஏன் கடினமான பணியாக இருக்கின்றது என்று நீங்கள் கேட்கலாம்?

இதை ஒரு எளிமையான உதாரணம் மூலம் விளக்க விரும்புகிறேன். இரண்டு குளங்களை இணைப்பதற்கு நிலத்தில் வெட்டப்படும் வாய்க்கால் போல இரண்டு கடல்களை இணைக்க நாம் வாழக்கூடிய நிலத்தில் வெட்டப்பட்டவைதான் இந்த சூயஸ் கால்வாயும், பனாமா கால்வாயும் ஆகும். அதனால், அவற்றின் கரைகள் உறுதியாக இருக்கின்றன .

ஆனால், சேது சமுத்திரம் திட்ட பணியானது, நம் கொள்ளிடம் ஆற்றில் முழுவதும் தண்ணீர் போய்கொண்டு இருக்கும்போது, ஆற்றின் நடுவில் ஒரு அடி அகலத்திற்கு சிறு வாய்க்காலை நீங்கள் வெட்ட முயற்சிப்பது போல ஆகும். எத்தனை தடவை கடினமாக உழைத்து நீங்கள் மண்ணை அள்ளி கொட்டினாலும், ஆற்றின் நீரோட்டம் மணலால் மீண்டும் அதை எளிதாக மூடிவிடும். அதை போல, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட பகுதியில் கடல் அடியில் உள்ள மணலில் எத்தனை முறை கால்வாய் வெட்டினாலும் சக்தி வாய்ந்த கடல் அடிப்பகுதி நீரோட்டங்கள் எளிதாக அதை மூடிவிடும். ஏனெனில் கடலுக்கு அடியில் ஒரு இடம் பள்ளமாக இருக்க வேண்டுமா அல்லது மேடாக இருக்க வேண்டுமா என்பதை கடல் நீரோட்டங்கள்தான் நிர்ணயிக்கின்றன.

கட்டுரையை எழுதியவர்

டாக்டர். வே. பாலாஜி

கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்

பட்டுக்கோட்டை

Sunday, January 16, 2011

what you think about it?

beautiful spider

I found this beautiful spider in a coastal village of thanjavur district. He is gold colured jumping spider (salticidae). Very cute and eager to watch my camera...see his eyes. amazing creature..(what he might think about me?)

Friday, November 19, 2010

புதிய வகை வெளிநாட்டு மீன் கண்டுபிடிப்பு

நவம்பர் 14 ஆம் தேதி (14th November 2010) அன்று தஞ்சாவூர் மாவட்டம், அம்மணிசத்திரம் கிராமத்தை சேர்ந்த அரும்பு என்ற மீனவர் அங்குள்ள வண்ணான் ஓடை குளத்தில் மீன்பிடிக்க சென்றபோது சுமார் ஒரு அடி நீளமுள்ள புதிய வகை கெழுத்தி மீன் வலையில் சிக்கியது. அவர் அந்த மீனை ஊராட்சி மன்ற தலைவர் ராஜவேலிடம் ஒப்படைத்தார். அவர் ஓம்கார் பௌண்டேஷன் நிறுவனத்திற்கு அளித்த தகவலின் பேரில், டாக்டர்.வே.பாலாஜி அந்த மீனை ஆய்வு செய்தார்.

டாக்டர். வே.பாலாஜி அளித்த தகவலின்படி இந்த மீனுடைய அறிவியல் பெயர் டீரோகோபிளிதைஸ் பர்டாலிஸ் என்பதாகும். இது லோரிகாரிடே என்ற உடல் முழுவதும் கவசம் போன்ற தோல் கொண்ட கெழுத்தி வகையை சேர்ந்த மீன் ஆகும். தென் மற்றும் வட அமெரிக்க கண்டங்களில் மட்டுமே வாழக்கூடிய இந்த மீன்கள் நம் பகுதியில் கண்டுபிடிக்கபட்டது ஆச்சரியமான விஷயமாகும். இந்த வெளிநாட்டு கெழுத்தி மீன்கள் அழகு மீன்களாக வளர்க்கப்படுவதற்காக தென் அமெரிக்காவிலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகின்றன. அப்படி இந்தியாவிற்கு வந்த இந்த மீன்கள் இங்குள்ள ஆறு குளங்களில் உயிருடன் தெரிந்தோ தெரியாமலோ விடப்படும்போது, அவை இனப்பெருக்கம் செய்து மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகின்றன. இதற்கு முன்பு இந்த வகை மீன்கள் தமிழகத்தின் வேறு சில ஊர்களிலும், கேரளாவில் உள்ள திருச்சூர் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் உள்ள நன்னீர் பகுதிகளிலும் கண்டரறியப்பட்டுள்ளன.

மேற்கண்ட அம்மணிச்சத்திரம் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெளிநாட்டு கெழுத்தி மீன், குளத்தின் அடிப்பகுதியில் உள்ள பாசி மற்றும் சேற்றில் உள்ள உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடியதாகும். இந்த வெளிநாட்டு கெழுத்தி மீன்கள் அதிகமாகும்போது, இங்குள்ள விரால் மீன் போன்ற மற்ற மீன்களுக்கு உணவு கிடைக்காமல் போய்விடும். இங்கு இயற்கையாகவே உள்ள மீன்களின் முட்டையை இந்த வெளிநாட்டு கெழுத்தி மீன்கள் சாப்பிடகூடிய வாய்ப்பு உள்ளதால் குளம், ஏரி போன்ற நன்னீர் பகுதிகளில் உள்ள மீன்வளமும் பாதிக்கப்படக்கூடும். மேலும், ஓடு போன்ற கடினமான இந்த மீனின் உடல் பகுதி மீனவர்களின் வலையை சேதப்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது .

உலகம் முழுவதும் இந்த மீன்களை போன்ற உயிருள்ள விலங்குகளையும் தாவரங்களையும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், அங்கு இயற்கையாகவே உள்ள தாவர, விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பிலிப்பின்ஸ் நாட்டில் ஜானிடர் மீன்கள் என்று அழைக்கப்படும் இந்த மீன்கள், அங்கு இயற்கையாகவே உள்ள மற்ற மீன்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாக செய்திகள் உள்ளன.

இந்த வெளிநாட்டு கெழுத்தி மீன்கள் தற்போது குறைந்த எண்ணிகையிலயே உள்ளதால், இவற்றின் மூலமாக தமிழகத்தில் உள்ள நன்னீர் குளங்களிலும், ஏரிகளிலும் உள்ள மற்ற மீன் இனங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படபோகும் பாதிப்பு பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.